Monday 17 November 2014

கல்வி கொள்ளை 12


நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியை ஒரு வடநாட்டவர் வாங்க திமுக அமைச்சர்கள் உதவி செய்தார்கள். நாடார் சமுதாயமே கொதித்து எழுந்தது. அதன் முடிவு திமுக ஆட்சிக்கு முடிவாக அமைந்தது. மெர்க்கன்டைல் வங்கியை வாங்கிய சிவசங்கரன் இந்திய குடிஉரிமையையே விட்டு விட்டு வேறு நாட்டுக்கு குடிபெயர்ந்து விட்டார். இது ஒற்றுமையின் பலத்தை காட்டும். ஒரு சமுதாயத்தின் ஒற்றுமையே இத்தனை அற்புதங்களை செய்யும் போது எல்லா சமுதாயத்தில் உள்ள இளைஞர்களின் நலனை கருதி எல்லா சமுதாயத்தினரும் அவரவர் சமுதாயத்தில் ஒற்றுமையாக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி எல்லா சமுதாய ஏழைகளின் ரத்தத்தில் இருந்து உறிஞ்சி சேர்க்கப் பட்ட எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்கி தமிழக மாணவர்களுக்கு நியாயமான கட்டணத்தில் தரமான கல்வியை வழங்க வேண்டும் என கேட்பதில் என்ன தவறு? அழுத பிள்ளை தான் பால் குடிக்கும். நாம் இந்த பிரச்சனையை கையில் எடுத்து இதை பெரிது படுத்தினால் மட்டுமே அரசு நிர்ணயித்த கட்டணத்தில் நாங்கள் தமிழர்களை சேர்ப்போம் என இறங்கியாவது வருவார்கள்.

No comments:

Post a Comment