Tuesday 25 November 2014

கல்வி கொள்ளை 20

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் யுஜிசி-யால் பல்கலைக்கழகம் என அங்கீகரிக்கப் பட்ட பிறகு அவர்களது நடைமுறை அனைத்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். ஆனால் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இருந்து நடத்தப்படும் Entrance  தேர்வு ஒழுங்காக நடத்தப் படவில்லை. அந்த தேர்வு எழுதிய வினாத்தாள்கள் யாருக்கும் வழங்கப்படவில்லை. தமிழக அரசு உயர்கல்வி துறையும் இந்த எஸ்.ஆர்.எம் நிறுவனத்தை பொறுத்த வரையில் தலையிட முடியாத நிலையிலேயே உள்ளது.

பல்கலைக்கழக மற்றும் கல்லூரி கட்டிடங்களுக்கு உள்ளுர் குழுமம் நில உபயோக சான்று மற்றும் நகர் ஊரமைப்பு துறை அனுமதி போன்ற அனைத்தும் இல்லாமலேயே கட்டிடம் கட்டப்படுகிறது. இவ்வாறு அனுமதி இல்லாமல் கட்டும் கட்டிடங்கள் வரைமுறை படுத்தப்பட முடியாது. ஆனால் இந்த இனத்தில் வரைமுறை படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் திமுக ஆட்சி காலத்தில் நடந்த செயல்கள். தியாகராஜநகரில் இவ்வாறு கட்டிடங்களை வரைமுறை படுத்த அரசு எடுத்த நடவடிக்கைக்கே சில நபர்கள் நீதிமன்றத்தை அணுகி தடை பெற்றார்கள். ஆனால் இந்த இனத்தில் அவ்வாறு தடையும் பெறப்படவில்லை. அரசும் இதில் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே இது பற்றி விரிவாக ஆதி முதல் அந்தம் வரை திரு.சகாயம் அவர்களின் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment