Thursday 13 November 2014

சகாயம் கமிஷன் விசாரணை வரம்பிற்குள் எஸ்.ஆர்.எம்.கல்வி கொள்ளையையும் சேர்க்க வேண்டும். அன்பர் நியாஸ் அகமது கோரிக்கை

பெறுநர்
ஆசிரியர்,
விகடன் வார இதழ்
சென்னை

ஐயா,

விகடன் ஒரு நேர்மையான பத்திரிக்கை. தாங்கள் திரு.சகாயம் பற்றி குறிப்பிடும் கருத்திற்கு நான் கீழ்கண்டவற்றை தெரிவிக்கிறேன்.

இந்த விசாரணையின் பின்னணியிலேயே தொழில் போட்டி, மிரட்டி பணம் பறித்தல் போன்ற ஏராளமான பின்னணிகள் உள்ளன. ஒரு நிகழ்ச்சியை தயாரிக்கும் நபர் அவருடைய திறமையை வைத்து கதை வசனம் எழுதுவது போல இங்கு கதை வசனங்கள் எழுதப்படுகின்றன. எனவே வந்த அறிக்கைகள் அனைத்தும் உண்மையல்ல. வர போகிற அறிக்கைகளும் உண்மையல்ல. சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையி;ல் ஒரு கும்பல் ஒரு சிலரை மிரட்டி பணம் பறிப்பதற்காக முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். சில ஊடகங்கள் அவர்கள் செய்த மெகா ஊழல்கள் வெளியே தெரியாமல் இருக்க மற்றவர்களை பற்றிய தவறுகளையும் ஊழல்களையும் ஊதி பெரிதாக்குகிறார்கள். அவ்வாறு ஆக்குவது தான் திரு.சகாயம் என்பதும். இது மக்களிடம் இருந்து வேறு சில ஊழல்களை மறைப்பதற்காக ஊதி பெரிதாக்கப்படுவது.  தயவு செய்து www.beachminerals.org  என்ற இணையத்தளத்தில் உள்ள வீடியோவையும், இதர ஆவணங்களையும் பார்க்கவும். அதனை பார்க்கும் வரை நானும் உங்களை போன்றே நம்பி இருந்தேன்.

22 வருடத்தில் 24 மாறுதல்களை சந்தித்தவர் என்று கூறுவது ஒரு தகுதியா? திமுக ஆட்சியில் ஒரே நாளில் 80-க்கும் மேற்பட்ட ஐஎஎஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்படவில்லையா?  ஒரு நிறுவனத்திற்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்பதற்காக 13 சீனியர் டி.ஆர்.ஓ-க்களை புறம்தள்ளி விட்டு 14-வது வரிசையில் இருந்த ஜோதிநிர்மலாவிற்கு ஐ.ஏ.எஸ் வாங்கி கொடுத்தது திமுக. இதனை எதிர்த்து ஒரு சீனியர் டீ.ஆர்.ஓ வழக்கு தொடர்ந்ததற்காக அவர் லஞ்ச ஒழிப்பு புகாரில் கைது செய்யப் பட்டார். சீனியாரிட்டி வேண்டும் என்றே புறந்தள்ளப்பட்டது என்பதற்கு என்னிடம் ஆவணம் உண்டு. தாங்களும் இதனை அரசு பொதுத்துறையில் தெரிந்து கொள்ளலாம். இந்த கொடுமைக்கு யார் வாய் திறந்தார்கள்.? இதற்கு பொது நல வழக்கு யாரும் போட்டார்களா?

ஒவ்வொரு அரசிலும் காவல்துறை மற்றும் அரசு அலுவலர்கள் சிலர் ஒரு குரூப்பாக செயல்படுவதும், முந்தைய அரசு மற்றும் அதற்கு வேண்டிய நிறுவனங்களை ஒடுக்குவதும் நடைமுறை நடைமுறையாக வந்தது தான். இதில் சில அலுவலர்கள் புத்திசாலியாக அரசு மாறுவதற்கு 6 மாதத்திற்கு முன்பாகவே மத்திய அரசு பணிக்கு மாறி விடுவார்கள். சிலர் ஆறு மாதத்திற்கு முன்பாகவே டம்மி பதவிக்கு போய் விடுவார்கள். நீங்கள் ஒரு கணக்கெடுத்தால் திமுக அரசில் அவர்கள் சொல் படி கொடுங்கோன்மை நடத்திய ஐஎஎஸ் ஆபிசர்கள் முக்கால்வாசி நபர்கள் திமுக ஆட்சி இருக்கும் போதே மத்திய அரசு பணிக்கு மாறி சென்று விட்டார்கள். ஓய்வு பெற்றவர்கள் அந்த பிரியட்லேயே அடுத்த பதவிகளை பெற்று விட்டார்கள். அப்போதைய தலைமை செயலர் ஸ்ரீபதி அவர்கள் இப்போது தலைமை தகவல் ஆணையர். மாநில அரசாலும் இவரை ஒன்றும் செய்ய முடியாது. இப்படி ஏராளம் உண்டு.

இதற்கு என்ன தான் மாற்று என தாங்கள் கேட்கலாம். ஓய்வு பெற்ற எந்த அரசு அலுவலருக்கும் தகவல் ஆணையர், அட்வைசர் உட்பட எந்த பதவியும் வழங்க கூடாது.

தகவல் ஆணையர் போன்ற பதவிகள் உயர்நீதிமன்றத்தில் இருந்து பெறப்படும் ஒரு பட்டியலில் இருந்து ஓய்வு பெற்ற நீதிபதிகளில் இருந்து நிரப்பப் பட வேண்டும். இவ்வாறு செய்தால் எல்லா தகவலும் பொது மக்களுக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஊழலை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும்.

சகாயம் அறிக்கை பற்றி தாங்கள் குறிப்பிடுகிறீர்களே! ஒரு வருடம் கழித்து தான் கலெக்டராக இருக்கும் போது அறிக்கை அனுப்பினார். அதுவும் அதிமுக அரசு வந்த பிறகு தான் அனுப்பினார். இதனை கருத்தில் கொள்ள வேண்டும். இது பிரசர் இல்லாமல் அனுப்பப் பட்ட அறிக்கையா? அனைவருக்குமே தெரியும். இவர் ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்படக் கூடியவர். கம்யூனிஷ கருத்து உள்ளவர் என்பது.

தமிழ்நாட்டில் கனிம கொள்ளை நடக்க கூடாது உண்மை. இதை பேசுபவர்கள் எத்தனை இனங்களை பேசினார்கள். எத்தனை இனங்களுக்கு பொது நல வழக்குகள் தொடுத்தார்கள்? பெருங்களத்தூர் பக்கத்தில் ஒரு தனியார் பல்கலைக்கழகம் சிறுபான்மை கல்வி நிறுவனம் என தெலுங்கு ஆர்ஜின் என பதிவு பெற்றுள்ளது. இந்த கனிமத்தை பேசுபவர்கள் இந்த கல்வி கொள்ளை பற்றி ஏன் பேசவில்லை. அவர்கள் போடும் ரொட்டி துண்டு காரணமா? அல்லது அங்கு அனைத்தும் சட்ட விதிப்படி நடக்கிறதா?

1000 ரூபாய் முதலீட்டில் உள்ள ஒரு நிறுவனம் 14 ஆண்டுகளில் 25 லட்சம் கோடி சொத்து சம்பாதித்துள்ளதாக ஒரு பதிவில் பார்த்தேன். பார்க்க : http://ruba442.blogspot.in/


10 சதவீதம் தெலுங்கர்களுக்கு தவிர இதர மாணவர்களை நிரப்புவதற்கு சென்னை பல்கலைக்கழகம் மூலம் கலந்துரையாடல் வைப்பார்களா? இவர்கள் கல்லூரியில் சேர்ந்தவர்கள் அனைவரும் தெலுங்கர்களும் தமிழர்களும் மட்டுமா? இவர்களே நுழைவு தேர்வு நடத்துகிறோம் என்றால் பாலுக்கு காவல் பூனையா? இதற்கு இந்த தன்னார்வ அமைப்புகள் யாரும் வாய் திறப்பார்களா? இந்த கொள்ளை பற்றியும் சகாயமே விசாரிக்கலாம். இவர்கள் அதை எழுதுவார்கள். ஆனால் போராட்டமும் இருக்காது. வழக்கும் இருக்காது.

இரண்டு ரூபாய் மதிப்புள்ள தினகரன் பத்திரிக்கையோடு 10 ரூபாய் மதிப்புள்ள ஜாமான்கள் இலவசமாக கொடுக்கப் பட்டன. இது வியாபாரிகள் ஆசையாக கொடுத்ததா? அல்லது அன்பான மிரட்டலில் பெற்றதா?

குங்குமம் பத்திரிக்கை அன்பான மிரட்டல் மூலம் ஹோண்டா சிட்டி கார் வழங்கியது என இன்று ஒரு பதிவில் பார்த்தேன். பார்க்க : http://niyasah01.blogspot.in/ .இதை பற்றியும் திரு.சகாயமே விசாரிக்க வேண்டும் என யாரும் கோருவார்களா?

சட்ட பஞ்சாயத்து இயக்கம், மனித உரிமை பாதுகாப்பு மையம், மக்கள் செய்தி மையம் இப்படி ஏராளமான தன்னார்வ அமைப்பு என்ற பெயரில் அனைத்து தரப்பினரும் இணைந்துள்ளார்கள். இதில் யாரும் நடவடிக்கை எடுக்க முடியாது. காரணம் இதில் வழக்கறிஞர்களும் உறுப்பினர் மற்றும் தலைவர். இதில் ஒருவர் மீது நடவடிக்கை எடுத்தால் உடனே நீதிமன்ற புறக்கணிப்பு ஆகி விடும். அடிபிடி ஆகி விடும். இதற்காக நீதிமன்றங்களும் அஞ்சுகின்றன.

காவல் துறையில் இருந்து ஊழல் செய்து வெளியே வந்தவர், கிராமத்தில் கற்பழிப்பு புகாரில் கிராமத்தை காலி செய்து வந்தவர், நீதிமன்றங்களில் போதிய வழக்கு இல்லாமல் சும்மா இருப்பவர்கள் இவர்களுக்கு எல்லாம் இப்போது புகலிடம் இம்மாதிரி ஊடகங்களில் ஊழலை ஒழிப்பேன் என எழுதுவது தான்.

இவர்கள் எத்தனை இனங்களுக்கு ஊழலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்கள்? எத்தனை இனங்களுக்கு பொது மக்களை அழைத்து போராட்டம் நடத்தினார்கள்? எத்தனை இனங்களுக்கு ஆலோசனை கூட்டம் போட்டார்கள்?

உங்களுக்கு ஒன்று தெரியுமா? முன்பு ஆற்று மணல் மாவட்;ட ஆட்சி தலைவரால் ஏலம் விடப்பட்டது. மாவட்டத்தில் 10 ரவுடிகளை அதை கொள்ளை அடித்தார்கள். 20 துணை ரவுடிகளுக்கு பங்கு போனது. இதனை ஒழிக்க வேண்டும் என ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு நீதிமன்றமும் அரசு நடத்த உத்தரவிட்டு இப்போது 30 மாவட்டத்திலும் 300 ரவுடி 600 துணை ரவுடி ஆக 900 நபர்கள் அடித்த கொள்ளை ஒரு நபர் அடிக்கிறார். இவர்களும் இதை பேசுவார்கள். ஆனால் போராட மாட்டார்கள். ஏனென்றால் இவர்களுக்கும் முறைப்படி பங்கு வருகிறது.

ஐயோ பாவம்.. கிரானைட்… ஊருக்கு எளியவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல் இந்த கிரானைட் மற்றும் கனிமத்தை எடுத்து விட்டார்கள்.

நீங்கள் உடனே ஆஷிஷ் குமார் என கூறலாம். அதிகாரியில் ஊழல் செய்யும் அதிகாரி இல்லையா? அறிக்கை கொடுத்த உடன் மாற்றப்பட்டார் என கூறுவீர்கள். அவர் திரித்து கூறி உள்ளார். மாற்றப்பட்ட உடன் முன் தேதியிட்டு அறிக்கை தயாரித்தார். இதனை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கோப்புகளே நிரூபிக்கும்.

ஏற்கனவே 39 லட்சம் டன் சட்ட விரோதமாக குவாரி செய்து 14 லட்சம் டன்னை திருச்சி கலெக்டர் பறிமுதல் செய்து பாதுகாப்பில் வைத்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர் கடந்த 3 வருடங்களாக அதனை அரசு ஏலம் விட்டு தொகையை பறிமுதல் செய்ய விடாமல் நீதிமன்றம் மூலம் தடுத்து வருகிறார். இவர்கள் யாரும் அதை பேசினார்களா? இல்லை.. ஏனென்றால் அந்த மெகா கொள்ளை கும்பல் பணத்தில் தான் அதனை மறக்கடிப்பதற்காக இவர்கள் இதை பேசுகிறார்கள். உங்களுக்கு வேண்டும் என்றால் இந்த ஆவணங்களை சென்னை உயர்நீதிமன்ற W.P.175 of 2010 என்ற தீர்ப்பில் உள்ள கட்டிலும் அதில் உள்ள சீராய்வு மனுவிலும் ஆவணங்கள் உள்ளன. பாருங்கள்.

இன்று வரை இந்த 39 லட்சம் டன்னில் நடவடிக்கை எடுக்கமுடியில்லை. கைப்பற்றப் பட்ட 14 லட்சத்தை அரசு கையகப்படுத்த முடியவில்லை. இதனை யாரும் கேட்கவும் இல்லை. இதனை பேச சொன்னால் இந்தியாவில் சட்டத்தின் நடைமுறை அப்படி உள்ளது என கூறுவார்கள். அப்படியானால் இது மற்றவர்களுக்கு பொருந்தாதா?

எனவே பாரம்பரியமான பத்திரிக்கையான தாங்களும் இவ்வாறு எழுதாதீர்கள். நான் ஏற்கனவே சொன்னது போல் கம்யூனிஷ சித்தாந்தம் உள்ள சகாயம் எதை பார்க்க சொன்னாலும் நிறுவனங்களுக்கு எதிராக மட்டும் தான் எழுதுவார். அதனால் தான் இந்த வேதாந்திகளும், இவர்களுக்கு படியளக்கும் கல்வி கொள்ளை பற்றியோ அல்லது மெகா கனிம கொள்ளை பற்றியோ ஊடகம் முழுவதையும் சுருட்டி வைத்துள்ள நிறுவனங்களை பற்றியோ எழுத சொல்லவில்லை. சகாயம் எளிமையானவர். உண்மை. அதற்காக கம்யூனிஷ சித்தாந்தத்தோடு எழுதுவது நியாயம் ஆகுமா?

தமிழக சட்டமன்றத்திலேயே 25 உறுப்பினர்களை கொண்டவர்களும் ஒரு தனி சட்டமன்றம் நடத்தினார்கள் ஒரு தனி சபாநாயகரை வைத்து. இது ஒப்புக் கொள்ளக் கூடியதா?

சகாயம் ஆய்வுக்கு உத்தரவு பெற்றவரே இது போல் ஒரு நிறுவனத்திடம் பணம் வாங்கி கொண்டு தாக்கல் செய்த வழக்கு தான் இது என்றும், இவர் ஏற்கனவே தாக்கல் செய்தவையும்; இதே போல் தான் என்றும், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் ஏகபோகமாக இருக்கும் வியாபார கட்டிடங்களை உடைக்க வேண்டும் என்பதற்காகவே அனுமதியற்ற கட்டிடத்திற்கு வழக்கு தொடர்ந்தார் என்றும் பேச்சு. சன் குழுமத்தின் 12 மாடி கட்டிடம் கடலோர மேலாண்மை விதிகளை மீறி கடற்கரைக்கு வெளியே இருக்கிறது என உண்மைக்கு புறம்பாக அங்கீகாரம் பெறப் பட்டது. இது இவருக்கு தெரியாதா? இவர் அதற்கு வழக்கு தொடர்ந்தாரா?

பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்த திரு.பச்சமுத்து தான் தெலுங்கு ஆர்ஜின் என கூறி சிறுபான்மை நிறுவனம் என உத்தரவு பெற்றார்? இது இவருக்கு தெரியாதா? வழக்கு தொடர்ந்தாரா? எஸ்.ஆர்.எம் நிறுவனங்களுக்கு கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும் இவர் வழக்கு தொடர்ந்தாரா?  எஸ்.ஆர்.எம் நிறுவனத்தில் கூடுதலாக பணமே வாங்கவில்லையா?

சன் குழுமம் சென்னைக்கு இலவசமாக வழங்குகிறது. வெளியே பணம் வசூலிக்கிறது. இதை தடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தாரா?

ரன்வேயில் எருமை வருவது கூட தெரியாத பைலட்களை வைத்து ஸ்பைஸ் ஜெட் விமானத்தை இயக்குகிறார்கள். தூத்துக்குடியில் மயில் மீது மோதியது. எனவே பொது மக்களின் உயிரை பாதுகாக்க இந்த பைலட்களின் தகுதியை பரிசீலிக்க வேண்டும். இவர்கள் உண்மையான பைலட்களா என்பதை விசாரிக்க வேண்டும் என எந்த தன்னார்வ அமைப்பும் மத்திய சிவில் விமான போக்கவரத்து துறைக்கு கோரிக்கை வைத்துள்ளார்களா? இது பற்றி யாருமே வாய் திறக்கவில்லை.

வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் என கலைஞரின் துணைவியார் ஒரு லட்சம் முதலீட்டில் தொடங்கிய ஒரு நிறுவனம் புத்தகத்தில் இயங்கியது. டி.ஆர்.பாலு வாசன் அனைவரும் கப்பல் மந்திரியாக இருக்கும் போது எல்லா துறைமுகங்களுக்கும் அவர்களுக்கு தான் டெண்டர் கொடுக்க வேண்டும் என உத்தரவு கொடுத்து பேப்பரில் உத்தரவு பெற்று பணியை வேறு நபர்களுக்கு கொடுத்து விட்டு கணக்கிற்கு மட்டும் கம்பெனியை புத்தகத்தில் நடத்தி இப்போது எத்தனை கோடி ஆகி உள்ளது. இவர்கள் யாரும் அதற்கு வழக்கு தொடர தயாரா? அல்லது சகாயத்தை வைத்தே விசாரிக்கலாம். தயாரா?

அந்த காலத்தில் பஞ்சாயத்து கொடுக்கும் வீட்டு பிளான் அப்ரூவல் இப்போது அரசு வரை போகிறது. இது எப்படி நடக்கிறது? இவர்கள் யாரும் வழக்கு தொடுத்தார்களா?

கனிம ஆய்விற்கே சம்பந்தப்பட்ட நிறுவனங்களை பிரதிவாதியாக சேர்த்தார்களா? அப்படி சேர்த்திருந்தால் இவர்களது உள்நோக்கம் வெளியே வந்திருக்கும். அது வராமல் இருப்பதற்காக எந்த நிறுவனத்தையும் பிரதிவாதியாக சேர்க்காமல் அரசை மட்டும் சேர்த்து அரசு வழக்கறிஞரின் வாத திறமையின்மையால் பெற்ற ஒரு உத்தரவு என கூறப்படுகிறதே.. இப்போதாவது சம்பந்தப்பட்ட நபர்களை பிரதிவாதி ஆக்கினார்களா?

அவருக்கு ஆலோசனைக்கு என மாவட்டம் தோறும் போடும் கூட்டத்தில் எத்தனை நபர்கள் பாதிக்கப்பட்டவர்கள்? இது என்ன ஒரு கருத்து கேட்பு கூட்டமா? இதுவே திரு.சகாயத்தின் மீது ஒரு கருத்து திணிக்கப்படுகிறது என்பதை நிரூபிக்காதா??

ஆய்வுக்கு நியமிக்கும் ஒரு அதிகாரியை ஒரு தரப்பார் இவ்வளவு புகழ்ந்தால் எப்படி அடுத்த தரப்பார் நம்புவார்கள்?? நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது. நீதி வழங்கப் பட்டதாக மக்கள் நம்ப வேண்டும் அல்லவா?

திரு.சகாயம் முழு ஆய்வையும் நாள் மற்றும் நேரம் ஓடும் வீடியோவில் ஆடியோவோடு சேர்த்து பதிவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனம் அதனை ஒட்டி உள்ள பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் அல்லது பாதிக்கப் பட்ட நபர்கள், ஒட்டி உள்ள கிராமத்தின் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் மட்டுமே ஆய்வின் போது உடன் இருக்க அனுமதிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வழக்கறிஞரும் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும். நிறுவனத்தினர் தேவை எனில் தனியாக வீடியோ செய்து கொள்ளலாம் என அனுமதிக்க வேண்டும். அன்றன்று ஆய்வு செய்து அளவீடு செய்யும் அளவுகள், சேகரிக்கும் ஆவணங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் அனைத்தும் அன்றே தொடர்புடைய நிறுவனத்திற்கு சகாயத்தால் உண்மை நகல் என கையொப்பம் இடப் பட்டு வழங்க பட வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே இந்த ஆய்வு நியாயமாக இருக்கும்.

இத்தனை பேர் ஒரு தலைபட்சமாக கருத்து திணிப்பை ஏற்படுத்தும் முகமாக திரு.சகாயம் அவர்களை பற்றி பேசி வரும் போது சகாயம் மேற்கண்ட நடைமுறையை கடைபிடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நானும் ஒரு கட்டத்தில் இவர்களை போல் கொடி தூக்கி அலைந்தவன் தான். ஒரு நாள் ஒரு ஆங்கில பத்திரிக்கையில் புகாருக்கும் உண்மை நிலைக்கும் சம்பந்தம் இல்லை. சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே எதிர்க்கிறார்கள் என குறிப்பிட்டதை பார்த்து எனது நண்பர்களோடு சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து உண்மையை அறிந்தேன். அதன் பிறகு தான் இவை உள்நோக்கத்தோடு தயாரிக்கப்படுகின்றன. தூண்டிவிடப்படுகின்றன என்பதை தெரிந்து கொண்டேன். ஊடகங்களில் இவை பற்றி விரிவான செய்தி வருவது இதன் நேர்மையான விசாரணையை கூட பாதிக்கும். நீதி மறுக்கப்படுவதற்கும் வாய்ப்பாக அமையும்.

அரசின் எல்லா நிலையிலும் எல்லா மட்டத்திலும் தவறுகள் இருக்கலாம். எல்லா துறையிலுமே தவறு உண்டு. எனவே ஒரு துறையே வேண்டாம் என கூற முடியுமா? தாங்கள் கேட்கலாம் சில அதிகாரிகளின் அறிக்கையின் முடிவு என்ன என்று?

இப்பகுதியில் உள்ள மக்களின் கருத்து படி அந்த அதிகாரியிடம் தவறாக அறிக்கை எழுதி பெற்றுள்ளார்கள். எனவே சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் மனு செய்து நீதிமன்றமே ஆணையரை நியமித்து ஆய்வு செய்ய வேண்டும் என கோரி உள்ளார்கள் என தெரிய வருகிறது.  இதில் என்ன தவறு?

எனவே ஆய்வு செய்யும் அலுவலர்கள் மீதும் நீதிமன்றங்கள் மீதும் கருத்து திணிப்பு ஏற்படுத்தும் முகமாக பொது நல அமைப்பு என்ற பெயரில் பணம் வாங்கிய சிலர் கருத்து வெளியிட்டால் கூட தாங்கள் அதனை ஊக்குவிக்க கூடாது. தாங்கள் நடுநிலையோடு இருதரப்பையும் எழுத வேண்டும்.  அது தான் ஒரு பாரம்பரியமான பத்திரிக்கைக்கு அழகு.

தயவு செய்து இதனை தங்கள் இ-பத்திரிக்கையிலும், பத்திரிக்கையிலும் வெளியிடுங்கள்.

No comments:

Post a Comment