Sunday 7 December 2014

கல்வி கொள்ளை - 26

எஸ்.ஆர்.எம். நிறுவனம் சட்ட புறம்பாக இவ்வாறு அனைத்து செயல்களையும் செய்கிறது என்பதை கீழ்கண்டவற்றில் தெரியலாம். இது பல்கலைக்கழகம் என அங்கீகரிக்கப் பட்டுள்ளதால் பல்கலைக்கழகத்திற்கு உள்ள அனைத்து சட்டங்களும் இதற்கு பொருந்தும்.

1) பல்கலைக்கழகங்கள் நுழைவு தேர்வு நடத்தும் போது அந்த ரிசல்ட் இணையதளத்திலும் பத்திரிக்கையிலும் வெளியிடப் படும் - ஆனால் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இந்த நடைமுறை இல்லை. ஏனென்றால் அதனை வெளியிட்டால் இவர்களது ஊழல் தெரிந்து விடும்.

2) நுழைவு தேர்வு வினாத்தாள்கள் அனைத்தும் யார் வேண்டுமானாலும் நகல் வாங்கலாம் என்பது அரசு பல்கலைகழகத்தில் உள்ள நடைமுறை. இதன் மூலம் வெளிப்படைத்தன்மை பாதுகாக்கப் படுகிறது. ஆனால் இந்த இனத்தில் யாரும் வினாத்தாள் கேட்க முடியாது.

3) அரசு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படும். இந்த இனத்தில் அது கடைபிடிக்கப் படவில்லை.

4) வேறு மாநில மாணவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள உள்ளுர் மாணவர்கள் என்ற பெயரிலேயே சேர்க்கப்படுகிறார்கள். இதற்காக பொய் சான்றிதழ்கள் சில நபர்களால் தயாரித்து வழங்கப்படுகிறது. இதில் எந்த சான்றிதழையும் இவர்கள் உரிய அதிகாரிக்கு அனுப்பி பரிசீலிக்கவில்லை.

No comments:

Post a Comment