Friday, 21 November 2014

கல்வி கொள்ளை 17

1000 ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்து 14 வருடத்தில் 25 லட்சம் கோடி ஈட்டிய பச்சமுத்து 319 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்ததை உறுதி செய்ய கேட்டு தாக்கல் செய்த மனு 2004-லேயே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. ரூபாய் 66 கோடி ஊழல் வழக்கு என அல்லும் பகலும் தொலைகாட்சியிலும் பத்திரிக்கையிலும் பேட்டியிலும் கூறி வந்த ஸ்பெக்டரம் புகழ், கலைஞர் ஆட்சி 2006 முதல் 2011 வரை இருந்தது. அவர்கள் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பணிந்து பச்சமுத்துவிடம் இருந்து அரசு நிலத்தை மீட்டார்களா?  இல்லை. காலி செய்ய யாரும் மனு போட்டார்களா? இல்லை. 2004-ல் நீதிமன்றம் தீர்ப்பளித்தும் 2014 வரை 319 கோடி ரூபாய் அரசு நிலத்தை 1000 ரூபாய் முதலீட்டில் 25 லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்து உள்ள பச்சமுத்துவின் வள்ளியம்மாள் டிரஸ்ட் தான் அனுபவித்து வருகிறது. இதற்கு மனித உரிமை அமைப்புகள், சவுக்கை சுழற்றுபவர், வழக்கறிஞர் பிரிவு, பொது நல மனு மன்னர் என யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனென்றால் இவர் அனைவருக்கும் சரியாக கட்டிங் வெட்டுவது தான்.  ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சி சேர்த்த பணம் எங்கெல்லாம் போகிறது பாருங்கள்.

No comments:

Post a Comment