Monday 17 November 2014

கல்வி கொள்ளை 13

பல்கலைக்கழக மானிய குழுவும் இவர்களுக்கு அஞ்சுகிறார்கள் என்பதற்கு இதோ ஒரு ஆதாரம். ஐந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் 2-வது கேள்வியும், 3-வது கேள்வியும் முக்கியமானது. அதாவது 2-வது கேள்வி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் படிப்பிற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என்பது. அதற்கு மானிய குழு கூறும் பதில் கட்டணம் நிர்ணயிக்கவில்லை.
 
3-வது கேள்வி பல்கலைக்கழக மானிய குழுவில் இருந்து எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்கு கொடுக்கப் பட்ட மானியம் எவ்வளவு என்பது. தொடர்புடைய பிரிவில் இருந்து வழங்கப்படும் என்ற பதில் 24.10.2013-ல் கொடுக்கப் பட்டது. ஒரு வருடம் ஆகியும் அந்த தகவல் வழங்கப் படவில்லை.
ஏனென்றால் வழங்கப்பட்டால் ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சுவதோடு மக்களின் வரி பணத்தில் இருந்தும் ஆண்டு தோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டப்படுகிறது என்பது வெளியே தெரிந்து விடும் அல்லவா??
 
கேட்ட கேள்வி, கிடைத்த பதில் இரண்டும் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
 
 

 

 

No comments:

Post a Comment