Wednesday 3 December 2014

கல்வி கொள்ளை - 24


ராமாபுரத்தில் உள்ள 315 கோடி மதிப்புள்ள நிலத்தை நீதிமன்றத்தின் உதவியோடு கபளிகரம் செய்ய திரு.பச்சைமுத்து செய்த முயற்சி மீண்டும் தோல்வியிலேயே முடிந்தது. முந்தைய திமுக ஆட்சி இருக்கும் போது அவர்களை சரி கட்டி உயர்நீதிமன்றத்தில் இருந்தே உத்தரவு பெற்று விடுகிறேன் என கூறி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு எண் 5173/2010 என ஒரு வழக்கு தொடர்ந்தார். துரதிஷ்டவசமாக 2011-ல் ஆட்சி மாறி காட்சியும் மாறி விட்டது. அரசு கடுமையாக எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த உண்மை நிலவரங்களை பிட்டு பிட்டு வைத்தது. இந்த வழக்கின் கடுமையை உணர்ந்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் மற்றும் வழக்கறிஞர்கள் இதில் ஆஜராகி நீதிமன்றத்தில் உண்மை நிலவரங்களை எடுத்துரைத்தார்கள்.

சென்னை உயர்நீதிமன்றம் இறுதியில் வள்ளியம்மாள் சொசைட்டியின் தலைவர் பச்சமுத்துவின் கோரிக்கையை ஏற்க மறுத்து அவர் தாக்கல் செய்த ரிட் மனு எண் 5173/2010-ஐ தள்ளுபடி செய்து கடந்த 25.02.2014 அன்று ஆணை பிறப்பித்தது.

உடனடியாக வீட்டு வசதி வாரியத்தில் இருந்து அந்த இடத்தை கையகப்படுத்தி இருக்க வேண்டும். மேலும் 10 வருட காலம் சட்டபுறம்பாக அனுபவித்து வந்ததற்கு மேற்கண்ட நிலத்தின் மதிப்பில் 10 சதவீதத்தை ஆண்டுதோறும் வாடகையாக வசூலித்து இருக்க வேண்டும். ஆனால் அந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக நாளது தேதி வரை எந்த தகவலும் இல்லை. அரசின் 310 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து எந்த உரிமையுமே இல்லாமல் இந்த கல்வி கொள்ளை கும்பலால் அனுபவித்து வரப்படுகிறது.

No comments:

Post a Comment