Thursday 20 November 2014

கல்வி கொள்ளை 16


2001-ல் 1000 ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டு தற்போது 25 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்து சேர்த்த வள்ளியம்மாள் டிரஸ்ட் பச்சைமுத்து ராமாவரத்தில் உள்ள 319 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை (சர்வே எண் 134/1A) தான் மோசடியாக அனுபவிப்பதை நியாயபடுத்த வழக்கம் போல் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு 12250/2004 என வழக்கு தொடர்கிறார். மேற்கண்ட வழக்கு 11.10.2004-லேயே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. கடந்த 10 வருடங்களாக எந்த அரசு அதிகாரியும் நீதிமன்ற உத்தரவின் படி மேற்படி சொத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம் இவர் வைத்துள்ள மலத்தை அள்ளி வீசும் சவுக்கு வீசுபவர் போன்ற அடியாள் படை தான். நீதிபதிகளே சவுக்கு வீச்சுக்கு பயந்து நமக்கு எதற்கு வம்பு என நினைக்கும் நிலை வந்து விட்டது. எனவே சினிமாவில் பார்ப்பது போல் இவர்களுக்கு மாமூல் கொடுக்காமல் தனி மனிதன் நீதியையும் பெற முடியாத நிலையை பச்சைமுத்து உருவாக்கி விட்டார். உயர்நீதிமன்றத்தில் ஒரு நேர்மையான நீதிபதி கடந்த 4 மாதத்திற்கு முன்பு சவுக்கு வீச்சின் ரவுடியிசத்திற்கு எதிராக ஒரு உத்தரவு கொடுத்தார். பிறகு அவரே வழி இல்லாமல் சவுக்காரிடம் சரண்டர் ஆக வேண்டிய நிலை ஆகி விட்டது. ஏனென்றால் அவர் வீட்டில் அவரது குழந்தைகளே கவுரவமாக வெளியே செல்ல முடியவில்லை.

No comments:

Post a Comment