Wednesday 26 November 2014

கல்வி கொள்ளை - 21

ராமாபுரம் கிராமத்தில் 315 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஆக்கிரமிப்பதற்கு அவர் மோசடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதையும் மேல்முறையீடும்; 2004-லேயே உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதையும் குறிப்பிட்டு இருந்தேன். ஆனாலும் அப்போதைய திமுக அரசு 2011 வரை மேற்கண்ட ஆக்கிரமிப்பை காலி செய்து கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக வீட்டு வசதி வாரியத்தில் இருந்தே மேற்கண்ட நிலத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதற்கு இவர்கள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான பிரவீன்குமார் தலையீட்டால் இந்த கொள்ளை தடுக்கப் பட்டது என்பதை முன்பு கூறி இருந்தேன். 

300 கோடி ரூபாய் மதிப்பிற்கு 10 சதவீத வட்டி வைத்து பார்த்தால் ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கும். இவ்வாறு திமுக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால் கடந்த 10 வருடத்தில் மட்டும் அரசுக்கு 300 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இந்த தொகையை மேற்கண்ட சங்கத்திடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

இது பற்றி ஏன் யாரும் வாய் திறக்கவில்லை.

No comments:

Post a Comment