Thursday 13 November 2014

கல்வி கொள்ளை - 9


படித்தவர்கள் எல்லாம் பணி ஓய்வு பெற்ற பிறகு பெரிய கம்பெனிகளின் ஆலோசகர்களாகவோ, இயக்குனர்களாகவோ சென்று விடுகிறார்கள். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் எதிரி கம்பெனியை அழிப்பதற்கு காசுக்கு புகார் எழுதவும், பேட்டி கொடுக்கவும் ஆன வேலையை செய்கிறார்கள். திரு.வெற்றிவேல் என்பவரின் முகநூல் செய்தியின் அடிப்படையில் www.beachminerals.org என்ற இணையதளத்தில் உள்ள வீடியோவையும் மற்ற ஆவணங்களையும் பார்வையிட்டால் உயர் அதிகாரிகள் எல்லாம் எவ்வளவு தரம் தாழ்ந்து உள்ளார்கள் என்பது தெரிகிறது. இவ்வாறு இருக்கும் போது எது எதற்கோ பொது நல வழக்கு தொடரும் டிராபிக் ராமசாமியும் இந்த கல்வி கொள்ளைக்கு வழக்கு தொடரமாட்டார். ஏனென்றால் யாரும் அதற்கு feed செய்ய மாட்டார்கள். வேறு எதற்கும் என்றால் போட்டி நிறுவனங்கள் feed செய்யும். இந்த ஏழை மாணவர்களுக்கு அவ்வாறு செய்ய ஆள் இல்லை. எனவே இளைஞர்களும், மாணவர்களும் இதை செய்வோம். மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவோம். கல்வி கொள்ளைக்கு ஒரு முடிவு கட்டுவோம். ஏழைகளிடம் உறிஞ்சப்பட்ட 25 லட்சம் கோடி சொத்தும் பல்கலைக்கழகமும் அரசுடமை ஆக்கப்பட்டால் நிச்சயமாக தமிழக அரசு தமிழக மாணவர்களுக்கு இலவச பொறியியல் மற்றும் மருத்துவ கல்வியும், தேவையான பணத்தை வேறு மாநில மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதன் மூலமும் சரி செய்ய முடியும்.

No comments:

Post a Comment