Wednesday 19 November 2014

கல்வி கொள்ளை 15


எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் கொள்ளை இதோடு மட்டும் நிற்கவில்லை. சென்னையில் ராமாபுரம் பகுதியில் தற்போது ஒரு கிரவுண்ட் அதாவது ஐந்தரை செண்டு நிலத்தின் விலை ஆறு முதல் எட்டு கோடி ரூபாய் வரை. அப்படியானால் ஒரு செண்டின் விலை ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய். ராமாபுரத்தில் சர்வே எண் 134/1 (தற்போதைய புல எண் 134/1எ) என்ற சர்வே எண் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமானது. மொத்த விஸ்தீரணம் 228 செண்டு. மொத்த மதிப்பு 319 கோடி ரூபாய். இந்த 319 கோடி ரூபாய் சொத்தையும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆண்டாள் அம்மாள் என்பவரிடம் இருந்து கையகப்படுத்தியது. இதனை எதிர்த்து அவர் 1986 மற்றும் 1995-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு வீட்டு வசதி வாரியத்திற்கு சாதகமாக தீர்ப்பானது. ஆனால் இவரிடம் தான் அரசு அதிகாரம் அனைத்தும் இருக்கிறதே. எனவே மேற்கண்ட வீட்டு வசதிவாரிய நிலத்தையும் சேர்த்து ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மற்றும் பல்மருத்துவ கல்லூரி என 6 லட்சம் சதுர அடிகளை கட்டினார். எப்படி இதற்கு நகர் ஊரமைப்பு துறை, பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி வழங்கியது. இந்த ஆவணங்களை பார்வையிடாமல் அனுமதி பெறப்பட்டது எப்படி?? அனுமதியற்ற கட்டிடத்தை இடிக்க வேண்டும் என சென்னையில் வியாபாரிகளை மிரட்டுவதற்கு பொது நல மனு தாக்கல் செய்யும் நபர்கள் ஏன் இதற்கு பொது நல வழக்கு தாக்கல் செய்யவில்லை. காரணம் நான் சொல்ல வேண்டியதில்லை. ஒழுங்காக மாதாமாதம் கட்டிங் வருகிறது. 319 கோடி ரூபாய் நிலத்தை 2003-ல் இருந்து இவர் அனுபவித்து வருகிறார்.

No comments:

Post a Comment